SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை பெண் எம்எல்ஏ மீது கட்சியினர் கடும் கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-13@ 01:20:58

‘‘மேங்கோ ஜூஸ் மாவட்டத்தில் புதுசா ஒரு பரபரப்பு கிளம்பி இருக்காமே... என்ன வெவரம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இந்த மாவட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஆசிரியர்களுக்கு எல்லாம் தலையாக இருப்பவர் வீட்ல சமீபத்துல விஜிலென்ஸ் அதிரடி சோதனை நடத்தினாங்க. இவரது வீடு, மாஜி விவிஐபியின் கிட்டதான் இருக்காம். இதனால் அந்த ரெய்டு பரபரப்பை உருவாக்கிடுச்சு. இதுல டிவிஸ்டே என்ன தெரியுமா... ரெய்டு நடந்து முடிந்து அந்த அடையாளமே மக்கள் மனதில் இருந்து மறைந்து இருக்காது... அடுத்த சில மணி நேரத்தில், ‘ஆசிரியர் தல’, மாஜி பெண் அமைச்சர் ஒருவரின் இல்ல விழாவில் ‘கிப்ட்’ வழங்கும் படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவிச்சாம். அதன் பிறகு தான், பல தகவல்கள் அதிர்ச்சிகரமாக உலாவத் தொடங்கியதாம்.
அந்த மினிஸ்டரை ‘ஆசிரியர் தல’க்கு அறிமுகப்படுத்தியவர், மாஜி விவிஐபியின் நிழலானவராம். அவருடைய முக்கிய பினாமிகள் லிஸ்டில் ‘தல ஆசிரியர்’ பெயரும் இருக்காம். வாடகை வீட்டில் வசிக்கும் ‘தல’ வீட்டில் ஏற்கனவே மதிப்பில் வராத லட்சக்கணக்கான மதிப்பிலான ஆவணங்களை போலீஸ் கைப்பற்றி இருக்காம். தற்போது நிழலானவர் பெயரும் அடிபட ஆரம்பிச்சி இருக்காம்... அதிரடி விசாரணையும் ரகசியமாக நடத்திக்கிட்டு இருக்காங்களாம். அது சரி சட்டியில் இருந்தால் அகப்பையில் இருக்கும் என்ற கதையாக... அவங்க கட்சி தொண்டர்களே காக்கிகளை நினைத்து சிரிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘20 வருஷம் கழித்து போலி சான்று என்று கண்டுபிடித்து ஆசிரியரை டிஸ்மிஸ் செய்தாங்களாமே... எவ்வளவு வேகம் பாருங்க... பாவம் அவங்க கிட்ட படித்த பிள்ளைங்கள நினைத்தால்...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்தில ஊராட்சி செயலாளர்களின் கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் நடந்தபோது குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் போலி கல்வி சான்று கொடுத்து, பணியில் பலர் சேர்ந்தது தெரியவந்தது. இதுல முதல்ல சிக்கிய 4 ஊராட்சி செயலாளர்களை பணியில இருந்து தூக்கிட்டாங்க. மேலும் 19 பேரின் கல்வி சான்று சரி பார்க்கும் பணிகள் நடக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விருது மாவட்டத்துல இருந்து விருந்து சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு ஒரு மேட்டர் நடந்ததாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் ‘‘பட்டாசு’’ தொகுதி எம்எல்ஏவான பழைய நடிகர் பெயர் கொண்டவர், தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி நிர்வாகிகளிடமும், மக்களிடமும் ரொம்பவே நெருக்கமாகப் பழகி வந்தாராம். ஜெயிச்சதுக்கு யாரையும் கண்டுகொள்ளவில்லையாம். இவரு பட்டாசு தொழிற்சாலை நடத்தி வர்றதால தொழிலுக்கு நிறைய உதவி செய்வாருன்னு பொதுமக்கள், பட்டாசு தொழிலாளர்கள் ரொம்பவே நம்பினாங்க. ஆனா, அவரு தொகுதி மக்களை சந்திக்கிறது இல்லையாம். அத்தி பூத்தாற்போல ஒன்றிரண்டு கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துக்கிறாராம். அவரை நேர்ல சந்திக்கவே முடியலை. யாரும் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டதா கட்சிக்காரங்க புலம்பித் தவிக்கிறாங்க. கட்சிகாரங்க அவர்கிட்ட போயி ஏதாவது தொகுதி பிரச்னை பத்தி பேசுனா, ‘‘எல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலைய பாருங்க’’ன்னு பட்டுன்னு பேசி விடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ‘‘நான் அரசியல்வாதி இல்லேன்னு’’ வேற பீதியை கிளப்புகிறாராம்... ‘முன்பு ஒரு கிளப்ல முக்கிய பதவியில் இருந்தார். இப்ப எம்எல்ஏ ஆனாலும் அந்த கிளப் தொடர்பான நபர்களையே பக்கத்தில் வைத்துள்ளார். கட்சிக்காரங்க யாரையும் கூட வரக்கூடாதுன்னு சொல்லி விட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் அவர்களே உடனிருக்கின்றனர். இதனால பொதுமக்கள் தங்கள் குறைகள அவர்கிட்ட சொல்ல முடியவில்லை. மொத்தத்துல எம்எல்ஏவே இல்லாத தொகுதியாத்தான் பட்டாசு தொகுதி இருக்கிறது... இந்த மேட்டர் போதுமா என்கிற அளவுக்கு மக்களும், அவங்க கட்சிக்காரங்களும் பேசிக்கிறாங்க...’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில் உள்ள ஒரு தேசிய கட்சியில் சமீப காலமாக பிளவு அதிகமாகிக்கொண்டே போகுதாம். நாங்கதான் மத்தியில ஆளும்கட்சி, ‘எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என போலீசை மிரட்டி வந்த இந்த கட்சியினரிடையே தற்போது கோஷ்டி மோதல் வலுத்து வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் கோவையில் வஉசி பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவில், அக்கட்சியை சேர்ந்த பெண் மக்கள் பிரதிநிதி பங்கேற்கவில்லையாம். மாறாக, இதே கோவையில் அரசு சார்பில் நடந்த வஉசி பிறந்த நாள் விழாவில் சிரித்த முகத்துடன் பங்கேற்றாராம். இது, அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை உருவாக்கி இருக்காம். ‘நாங்க பார்த்து ஜெயிக்க வைச்சோம்... தேர்தல் வேலையை இழுத்துப்போட்டு செய்தோம்...  நாங்க இப்படி, உழைக்காம இருந்தா இந்தம்மா ஜெயிச்சிருக்க முடியுமா... சட்டமன்றத்துக்குள் கால் வைத்திருக்க முடியுமா... ஏறிய ஏணியை எட்டி உதைத்து விட்டாங்க... இனிமேல் தான் நாங்க யார் என்று அந்த அம்மாவுக்கு காட்டப்போறோம்னு புலம்பி தள்ளிட்டாங்களாம். இது, பெண் மக்கள் பிரதிநிதி காதுக்கு போச்சாம்...  இதற்கு அவர், ‘‘திட்டமிட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. வஉசி பிறந்த நாள் விழாவை, அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்காக போனேன். இதுதான் உண்மை. மற்றபடி நான் ஏணியில் ஏறவும் இல்லை.. எட்டி உதைக்கவும் இல்லை. எங்களுக்குள் கோஷ்டி மோதல் எதுவும் இல்லை. நாங்க இன்னிக்கு காரமா பேசிக் கொள்வோம்.. கட்சினு வந்துட்டா நாளைக்கு நாங்க லட்டு இனிக்கிற மாதிரி சிரித்து பேசிப்போம்...’ என அதிரடியாக போட்டுத் தாக்கினாராம். இவரின் பேச்சுக்கு திருப்பி கோல் அடிக்க முடியாமல் எதிர்கோஷ்டி தவிக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • christmas-30

  நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்