SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரட்டும் மக்கள் பணி

2021-09-12@ 01:06:10

ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் நலன் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு3 குறைப்பு உள்ளிட்ட முத்தான முதல் 5 அறிவிப்புகள் துவங்கி நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில், எல்லா துறைகளையுமே ஊழல் பணம் கொட்டும் இயந்திரங்களாக மாற்றிவிட்டனர். அதிலிருந்து ஒவ்வொரு துறையையும் திமுக அரசு மீட்டு வருகிறது. அதில் முக்கியமானது, இந்து அறநிலையத்துறை. இந்த துறை தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில்,  அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில, முக்கியமான மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும். கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும்  அர்ச்சகர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்கப்படும்.

இதில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டு விட்டனர். நீண்ட காலமாக குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. மலைக் கோயில்களுக்கு கேபிள் கார் வசதி செய்து தரும் பணி பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. இது தவிர கோயில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி சொத்துக்கள் வெகு வேகமாக மீட்கப்பட்டு மீண்டும் கோயில்களுக்கே உரிமையாக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்து பக்தர்கள் வயிற்றில் பால் வார்த்த கையோடு, இதனால், வருமானம் பாதிக்கப்படும் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டது தமிழக அரசு, தாயைப்போல  எல்லோரையும் காக்கும் அரசு என்பதற்கு இது சான்று.இப்போது, கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்.

இந்நிலையில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு ₹1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்று துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டமே கடந்த வாரம்தான் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. உடனடியாக இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திட்டம் என்றாலே அறிவிப்போடு நின்று போவதற்காக வெளியிடப்படுவது என்பது அதிமுக ஆட்சியின் அவலம். ஆனால், திமுகவை பொறுத்தவரை சொன்னதை செய்வோம், அதையும் உடனே செய்வோம் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கி, அதிரடி காட்டும் முதல்வரின் மக்கள் பணி தொடரட்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்