கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RT -PCR பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்: மருத்துவத்துறை செயலர் உத்தரவு..!
2021-09-10@ 18:46:52

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RT -PCR பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சிக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு முதல் 1,587 லிருந்து அதிகரித்து 1,596 ஆகப் பதிவாகியது. இது நேற்று முன்தின எண்ணிக்கையை விடச் சற்று அதிகம். இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த தொற்று இரண்டாம் நாளாக நேற்றும் அதிகரித்திருந்தது.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,59,684 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கும் மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளர்.
கடிதத்தில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதைத் திட்டமிட்டுத் துரிதப்படுத்த வேண்டும் என அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் கொரோனா கண்டறியப்படும் நபருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும். 12ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
திருப்பதியில் கங்கனா தரிசனம்
தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்
மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனி
8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்த நயன்தாரா
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!