சின்னாளபட்டியில் கழிப்பறைக்கு இல்லை தண்ணீர் வசதி: ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும்
2021-09-10@ 12:42:21

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி 1வது வார்டு வீரம்மாள் கோயில் தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தை போகாரி ஆசாரி தெரு, கொல்லர் ஆசாரி தெரு, அங்கணன் ஆசாரி தெரு, பெரியார் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தில் தண்ணீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறு முறையாக பராமரிக்காததாலும், ஆழம் அதிகம் இல்லாததாலும் முறையான தண்ணீர் வசதி இல்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தை பராமரிப்பவர் பொதுமக்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ.2, 3 வீதம் வசூல் செய்து அதில் வரும் பணத்தை வைத்து தண்ணீரை டிராக்டர் மூலம் விலைக்கு வாங்கி சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டு வருகிறார். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை செயல்படாததால், அவர்கள் அருகேயுள்ள ஓடை பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம் வீரம்மாள் கோயில் தெரு சுகாதார வளாகத்தில் முறையாக தண்ணீர் வசதி செய்து கொடுப்பதுடன், இங்குள்ள ஆழ்துளை கிணற்றையும் ஆழப்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!
தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி
கடந்த ஒன்றரை ஆண்டில் குமரியில் விபத்தில் 199 சிறுவர்கள் பலி: 2,128 பேர் படுகாயம்
பரமக்குடி நாற்றாங்கால் பண்ணையில் 20 லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்துக்கு வழங்கி சாதனை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!