பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் எலும்புகளுடன் முதுமக்கள் தாழி
2021-09-10@ 01:34:09

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 2 ஏக்கர் அளவுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது. இதன் ஒருபகுதியில் இருந்த கருகிப்போன மரக்கன்றுகளை அகற்றி விட்டு, புதிதாக மரக்கன்றுகளை நடும்பணியில் மாணவ, மாணவிகள் நேற்று ஈடுபட்டனர். இதற்காக குழி தோண்டிபோது பானை உடையும் சத்தம் கேட்டது. உடனடியாக ஆசிரியர் பாதுகாப்பாக தோண்டி பார்த்தார்.
அதில் பெரிய முதுமக்கள் தாழி ஒன்று இருந்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வரவழைத்து, பெரிய அளவில் பள்ளம் தோண்டி முதுமக்கள் தாழியை பத்திரமாக வெளியே எடுத்தனர். அதற்குள் எலும்புகள் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். தகவலறிந்து மாணவ, மாணவிகள், கிராம மக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், பாண்டமங்கலம் ஆர்ஐ மோகன் மற்றும் கொந்தளம் விஏஓ தமிழ்ச்செல்வன் ஆகியோர், எலும்புகளுடன் முதுமக்கள் தாழியை எடுத்துச்சென்றனர். அவை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, தாலுகா அலுவலக காப்பக அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags:
Paramathivelur Government School Grounds Elderly with bones பரமத்திவேலூர் அரசு பள்ளி மைதான எலும்புகளுடன் முதுமக்கள் தாழிமேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!