SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டெழும் வரலாறு...

2021-09-10@ 00:26:56

தமிழகத்தில் நடந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழர் நலம் சார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி தமிழர் நிலம் சார்ந்த விஷயங்களிலும் எதிர்முனையில் இருக்கும் ஒன்றிய அரசுக்கு கொட்டு வைப்பது போல, அவர் சட்டப்பேரவையில் முன்வைத்துள்ள கருத்துக்கள் தமிழறிஞர்களுக்கு மட்டுமின்றி தொல்லியலாளர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020, பிப். 1ம் தேதி நடந்த பட்ஜெட் உரையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட்டார். இதற்கு, தமிழகத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார். ``எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பில் தீவிரம் காட்டிவரும் பாஜ அரசு,  நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் சூட்டி கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும், தீர்க்கவும் முயல்வதை தமிழகம் பொறுத்துக்கொள்ளாது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் நேற்றைய பேச்சின்போது, ``கி.மு 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே கொற்கை துறைமுகம் செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கடல் வணிகம், முத்து குளித்தல் என பல விஷயங்கள் அகழாய்வில் தெரியவந்துள்ளது. கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது. அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்படும். தமிழ் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதி பெற்று தொல்லியல் ஆய்வுகளை நடத்தும். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவதே தமிழ்நாடு அரசின் கடமை’’ என்று தெரிவித்துள்ளார். கடல் கடந்த தமிழர்களின் தொப்புள் கொடியைத் தேடும் அவரது முயற்சிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு ஒன்றிய அரசும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்