220 மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை பருவநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பு
2021-09-07@ 00:50:18

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் குறித்து உலகளாவிய முறையில் சமூகத்தில் உடனடியாக முழு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று இயற்கை, சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்தும், வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர். வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்தின் கிளாஸ்கோவ் நகரில் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச உச்சி மாநாடு ஐநா பொதுசபை சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல மருத்துவ இதழான லான்செட், உள்பட 220 இதழ்களில் வெளியான கட்டுரையில், இந்திய தேசிய மருத்துவ இதழின் தலைமை பத்திரிகை ஆசிரியரும், கட்டுரையின் இணை ஆசிரியருமான பியூஷ் சாஹ்னி கூறியிருப்பதாவது: உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளால் பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கபட்டு மனிதர்கள், வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உலக நாடுகள் தற்போதாவது, விழித்து கொண்டு நாடுகளின் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.
உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசுக்கு கீழே வைத்திருக்க உலக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியதன் விளைவே, சமீபத்தில் உலகளவில் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் காட்டுத்தீ, வெள்ளம், புயல், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களாகும். வெப்பமயமாதலை தடுக்க, இயற்கையை பாதுகாக்க நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இருப்பினும், அவை எதிர்காலத்தில் குறுகிய, நீண்ட கால திட்டத்துக்கு போதுமானதாக இல்லை. எனவே, சமூகத்தின் பொருளாதாரம், போக்குவரத்து, நகர உள்கட்டமைப்பு, உணவு தானிய உற்பத்தி மற்றும் வினியோகம், சந்தை முதலீடு, சுகாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் அரசு தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ இதழ்களில் இக்கட்டுரை வெளியிடப்படும்.
Tags:
220 Medical Journals Alert Climate Change Health Impact 220 மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை பருவநிலை மாற்ற சுகாதார பாதிப்புமேலும் செய்திகள்
காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!