காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
2021-08-30@ 16:26:03

சென்னை: காரைக்குடியில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.8.2021) தலைமைச் செயலகத்தில், ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார். இப்புதிய விற்பனையகம் 5,500 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு, தரைத்தளத்தில் 4 விற்பனையகங்கள் சுத்த பட்டு இரகங்களுக்கும், 3 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும், முதல் தளத்தில் 6 விற்பனையகங்கள் பருத்தி இரகங்களுக்கும் மீதமுள்ள ஒரு விற்பனையகம் கைவினை பொருட்களை காட்சிப்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தின் வெளிப்புறத்தில் சிற்றுண்டி சாலை, சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா ஆகியவை வாடிக்கையாளர்கள் மற்றும் நெசவாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கைத்தறி குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற முக்கிய இரகங்களான அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், பரமக்குடி சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர இரகங்களும் இவ்விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும். இவ்விற்பனையகத்தில் தமிழகத்திலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெறும்.
மேலும், இவ்விற்பனையகத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணி இரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!