செங்கல்பட்டு ஜி.ஹெச்.சில் தூங்குவதற்கான இட வசதி: நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை
2021-08-24@ 18:56:56

செங்கல்பட்டுசெங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு, பொதுநல பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். அந்த வகையில் 5 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, இங்கு தாய்சேய் நல சிகிச்சை பிரிவில் பிரசவத்திற்காக வரும் பெண்கள் அதிகம் என்பதால் அவர்களுடன் பெற்றோர்கள், உறவினர்கள் வருகின்றனர். இவர்கள், தாய் சேய் நல கட்டிடம் முன்பு இரவு நேரத்தில் தங்குவதற்கு இடமில்லாமல் சிகிச்சை பிரிவு வளாகத்திலேயே தூங்குகின்றனர்.
இவர்கள், கொசு கடியிலும், விஷ பூச்சிகளின் அச்சத்திலும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிகளை பார்க்க உறவினர்களும் வருவதால், சில நேரங்களில் அவர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கும் நிலை உள்ளது. போதுமான இட வசதி இல்லாததால் அருகருகே படுத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கர்ப்பிணிகளை பார்க்க வரும்போது, சில நேரங்களில் இரவு பஸ் வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால் வேறு வழியின்றி மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கு தூங்குவதற்கு போதுமான வசதி இல்லை. அதனால் தனி அறை ஒதுக்கி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். எங்களது நிலையை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!
தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி
கடந்த ஒன்றரை ஆண்டில் குமரியில் விபத்தில் 199 சிறுவர்கள் பலி: 2,128 பேர் படுகாயம்
பரமக்குடி நாற்றாங்கால் பண்ணையில் 20 லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்துக்கு வழங்கி சாதனை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!