SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் பள்ளிக்கல்விக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு: உயர்கல்விக்காக ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கீடு

2021-08-14@ 00:08:28

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
* பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’, ரூ.66.70 கோடி மதிப்பில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.  
* அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.
உயர்கல்வி
* இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்.
* மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து, பல்வேறு கல்லூரிகளில் பயிற் றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் மறுசீரமைக்கப்படும்.  25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.10 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.
* உயர்கல்விக்காக ரூ.5,369.09 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டுக்கு தனி கல்விக்கொள்கை
தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.

*ஆளில்லா விமான கழகம்
புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும். இந்நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும்  உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்