வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய அரசு புதிய வசதி
2021-08-09@ 00:35:32

புதுடெல்லி, ஆக. 9: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’ இணையதளத்தின் மூலம் இது அளிக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோவின் இணையதளத்தில் இருந்து உடனடியாக இதை டவுன்லோடு செய்வதும் பல நேரங்களில் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில், இந்த சான்றிதழை எளிதாக பெறுவதற்கான வாட்ஸ் அப் வசதியை ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்துள்ளது.
இது குறித்து இத்துறையின் அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சமான்ய மனிதனின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் புரட்சி. கொரோனா தடுப்பூசி சான்றிதழை இப்போது வாட்ஸ் அப்பில் 3 எளிய நடைமுறையில் பெறலாம். 90131 51515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்யுங்கள். ‘covid certificate’ என்று வாட்ஸ் அப்பில் டைப் செய்யுங்கள். உங்களுக்கு வரும் ஓடிபி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் சான்றிதழை நொடியில் பெறுங்கள்,’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி இந்தியாவிலும் இனி சாத்தியம்
மிக நீளமான வால்வோ சொகுசு பஸ்
யமஹா மோட்டோ ஜிபி எடிஷன் பைக்குகள்
வருது ஓலா கார்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronics
அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!