SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜ் பெயர்கள் நீக்கம் இல்லை: விமான நிலைய அதிகாரி ஆர்டிஐயில் தகவல்

2021-08-05@ 00:03:43

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜ் பெயர்கள் நீக்கம் இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரி பனிக்கர் ஆர்டிஐ மூலம் தகவல் அளித்துள்ளார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான முனையத்திற்கு அண்ணா பெயரும் இருக்கிறது. சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்த பெயர்ப் பலகையில் இருந்து காமராஜ் பெயர் நீக்கப்பட்டது மற்றும் சென்னை விமான நிலைய இணையதளத்தில் இருந்த காமராஜ் மற்றும் அண்ணா பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக இந்த இரு பெயர்களையும் நீக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த இரு பெயர்கள் நீக்கம் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரி பனிக்கர் அளித்த பதில்: தற்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்திற்கு அண்ணா பெயரும் உள்ளது. இந்த இரண்டு பெயர்களும் நீக்கப்படவில்லை. மாறாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பெயர் பலகை மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய இணையதள பக்க முகப்பில் காமராஜ் மற்றும் அண்ணா பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் பெயர் பலகைகள் மீண்டும் வைக்கப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘இந்தியாவின் பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய கிங்மேக்கர் என்று அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜர் பெயரையும், தமிழ்நாட்டின் சிறப்புமிக்க முதலமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் பெயரையும் சிறப்பிக்கும் வகையில் உள்ள சென்னை விமான நிலையத்தின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்ற கூடாது. மேலும் பெயர் பலகைகள் அனைவரும் அறிந்திடும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட வேண்டும். பெருந்தலைவர் காமராஜ் பெயரும், அறிஞர் அண்ணாவின் பெயரும் நீக்கப்பட மாட்டாது என அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கூறினர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்