SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புற்றுநோயா கவலை வேண்டாம் வந்துவிட்டது நவீன சிகிச்சை

2021-07-31@ 14:16:27

புற்றுநோய் என்பது நெருப்பைப் போல, நெருப்பு ஒரு கட்டிடத்தில் ஆரம்பித்து எரியும் பொழுதே கண்ணுக்கு தெரியாத நெருப்புப் பொறிகள் காற்றில் எல்லா திசைகளிலும் பரவும். நாம் கண்ணுக்குத் தெரிந்த நெருப்பு ஜூவாலை மீது மட்டும் தண்ணீர் ஊற்றி அணைப்போம். ஆனால் பல திசைகளுக்கும் சென்று தங்கிய பொறிகளில் இருந்து மீண்டும் நெருப்பு பற்றி கட்டிடம் முழுமைக்கும் பரவி முழு கட்டிடத்தையும் அழித்து விடும். ஆகவே நெருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருக்கும்போதே கட்டிடத்தின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் ஊற்றினால் நெருப்பு பரவாமல் காப்பாற்றி விடலாம்.

அதுபோலத்தான் புற்றுநோயும், உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலோர்க்கு அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் உடலின் முக்கிய பாகங்களான மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் சென்று தங்கி வளரும். முதலில் ஆரம்பித்த பாகத்திற்கு மட்டும் ரேடியோதெரபியோ அல்லது அறுவை சிகிச்சையோ அல்லது இரண்டும் சேர்த்து செய்தாலோ முழு குணம் உண்டாவது இல்லை. பெரும்பாலோர்க்கு அறுவை அல்லது ரேடியோதெரபி செய்து சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரைப் பறித்து விடுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோதெரபி மட்டுமே செய்யப்பட்டது. இன்றும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இவையே செய்யப்படுகின்றன. ஆனால், சமீப வருடங்களில் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சரியான கலவையில் நரம்புவழியாக ரத்தத்தில் செலுத்தினால் C.T.SCAN, MRI SCAN, PET SCAN ஆகியவற்றிற்கும் தெரியாத உடல் எங்கும் பரவி உயிர் பறிக்க காத்திருக்கும் புற்றுநோய் விதைகள் அழிவதுடன், முதலில் ஆரம்பித்த பெரிய கட்டியும் மேலும் வளராமல் சுருங்கி சக்கை ஆகிவிடும். இதற்கு மேலும் தேவைப்பட்டால் சிறிய அளவு அறுவை சிகிச்சையோ அல்லது ரேடியோ தெரபியோ செய்து வைத்தியத்தை பூர்த்தி செய்யலாம்.

இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும், மார்பகப்புற்றுநோய், மூச்சுக்குழாய் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய், நாக்கு புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குழந்தைகள் புற்றுநோய் ஆகியவற்றை ஆபரேஷன் செய்து அகற்றாமல் வைத்தியம் செய்யலாம். இதுதவிர ஏற்கனவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோதெரபி செய்தும் முற்றி உடலில் பல பாகங்களுக்கும் பரவி உயிர் குடிக்கக் காத்திருக்கும் பலருக்கு, நவீன மருந்துகள் அளித்து வாழ்நாள் மற்றும் வாழ்வின் தரம் (Quantity and quality of life) குறையாமல் காப்பாற்றலாம், ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்தும் குணமடையாத புற்றுநோயையும் இம்முறையில் குணப்படுத்தலாம்.

AIDS நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோயும் வருகிறது. புற்று நோயாளிகள் சிலருக்கு AIDS இருக்கிது. சமீபத்தில் வந்திருக்கும் நவீன சிகிச்சை முறைகளில் AIDS +புற்றுநோய் இரண்டும் உள்ள நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்ய முடியும் என்கிறார் சென்னை மருத்துவ மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் 30 ஆண்டுகளாக கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதற்கென்றே மந்தைவெளியில்  K.K.R. மருத்துவமனையை நிறுவி சிகிச்சை அளித்து வருகிறார். 

KKR மருத்துவமனை : No. 26/49, Venkatakrishna Rd, Near Mandaveli Bus stand , Mandaveli, Chennai, Tamil Nadu 600028. 

தொடர்புக்கு: 8883000123, 9884057000

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்