SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானில் கனமழை வெள்ளத்தில் 150 பேர் பலி

2021-07-30@ 00:44:42

காபூல்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், அதைத் தொடர்ந்து சீனா, இந்தியாவிலும் கனமழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்நாட்டின் நியூரிஸ்தான் மாகாணத்தில் உள்ள கம்தீஷ் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில், ஏராளமான வீடுகள் மூழ்கின. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு150  பேர் பலியாகிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும்., 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்