SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“வேண்டும்… வேண்டும்…. நீதி வேண்டும்”... சர்தார்ஜியின் தமிழ் கர்ஜனை மக்களவையை உலுக்கிக் கொண்டிருக்கிறது!!

2021-07-29@ 13:19:40

மதுரை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,

'17வது மக்களவையில் அதிகமாக எதிரொலித்துக் கொண்டிருப்பது மூன்று முழக்கங்கள்
 “We want Justice…. We want Justice”
“நஹி சலேகா…. நஹி சலேகா… டானா சாஹி நஹி சலேகா”
 “வேண்டும்… வேண்டும்…. நீதி வேண்டும்”

CAA துவங்கி பெகாசஸ் வரை மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்படும் முழக்கங்கள் இவை மூன்றும்.

வழக்கமாக மக்களவையின் மையப்பகுதியில் எதிர்கட்சி உறுப்பினர்களால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முழக்கம் எழுப்பப்படும். தமிழக உறுப்பினர்கள்  தமிழில் முழக்கங்களை எழுப்புவதுண்டு.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து ஏழு நாட்களாக பெகாசஸ் - வேவு பார்க்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக 150 மக்களவை உறுப்பினர்கள் போராடி வருகிறோம். வழக்கம் போல் அவையின் மையப்பகுதியில் இடைவிடாது முழக்கம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இம்முறை சற்றே ஆச்சரியமான விசயம் என்னவென்றால், வழக்கமாக ஒருவர் முதலில் முழக்கத்தை முன்னெடுப்பார், மற்ற அனைவரும் அவரை குரல் வழி பின் தொடர்வோம். இப்பொழுது இத்தமிழ் முழக்கத்தை முன்னெடுப்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்பீர் சிங்.
“வேண்டும் .. வேண்டும் “ என்று அவர் முழங்க, “ நீதி வேண்டும்” என்று நாங்கள் முழங்குகிறோம்.
சர்தார்ஜியின் தமிழ் கர்ஜனை மக்களவையின் மையப்பகுதியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்