சாலை பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனங்களில் பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
2021-07-26@ 00:45:37

சென்னை: ஒரகடத்தில் உள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். ஒரகடத்தில் அமைந்துள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். எச்சரிக்கை பலகைகள், வேக அளவு பலகைகள், அபாய வளைவு, பலமுனை சந்திப்பு, வழிகாட்டி பலகை, வேக அளவு கோல், சிக்னல், நடைபாதை கோடுகள், ரப்பர் வேகத்தடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். அப்போது, இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் தரமான சாலை மைய குறியீடுகள், கனமான சமிக்கை பலகைகள் மற்றும் பளிச் வகையிலான பிரதிபலிப்பான் ஆகியவை முறையாக அமைக்கப்பட வேண்டும்.
சாலைகளில் அமைக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் கனமாகவும், தரமாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். தெளிவாக அனைத்து மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைத்தல், சாலையை பயன்படுத்துவோர் எளிதில் பின்பற்றத்தக்க வகையில் அமைத்தல், பயனாளிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வண்டலூர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரூ.37.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயிவே மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இப்பணிகளைத் துரிதப்படுத்தி நவம்பர் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!