SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

2021-07-22@ 10:27:53

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார். அதில், பெகாசஸ் மென்பொருள் மூலமாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்பேசிகள் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான புகாரை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
மேலும் உச்சநீதிமன்றத்தின் நேரடியான கண்காணிப்பின் கீழ் சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை அமைத்து யாருடைய செல்பேசிகள் எல்லாம் ஒட்டுகேட்கப்பட்டது, எவ்விதமான தகவல்கள் திருடப்பட்டது, யார்யார் எல்லாம் இதில் உடந்தையாக இருந்தனர், நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா உள்ளிட்ட விவரங்களை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களின் அடுத்தடுத்து பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்