குமரியில் அதிமுக கூடாரம் காலி: கூண்டோடு திமுகவில் இணைகிறார்கள்
2021-07-20@ 15:22:31

நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுக கூடாரம் காலியாகிறது. முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று மாலை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும், குமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசுவாமி, ேதாவாளை ஒன்றிய அவைத்தலைவர் மோசஸ் ராமச்சந்திரன், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன் என்ற சுதாகர்,
தோவாளை வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயந்தி, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கலை இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் டொமினிக், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வரதராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரை அதிமுகவில் இருந்து நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தோவாளை ஒன்றியத்தில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமரியில் அதிமுக கூடாரம் காலியாகி விட்டதாக தெரிகிறது.
மேலும் செய்திகள்
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்
2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்
உடுக்கை அடித்து ஓட்டு சேகரிக்கும் குடுகுடுப்பை கோவிந்தன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!