பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று காலை வெளியாகிறது: புதிய முறைப்படி ‘மார்க்’ கிடைக்கும்; மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
2021-07-19@ 00:03:28

சென்னை: பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் இன்று காலை வெளியாகிறது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தமிழகத்தில், 2020-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் படித்த மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடையத் தொடங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மே 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நேரடி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டு குழுவையும் நியமித்தார். அந்த குழு தனது பரிந்துரையை கடந்த 25ம் தேதி முதல்வரிடம் அளித்தது. அதை ஆய்வு செய்த பிறகு மதிப்பெண்கள் வழங்கும் முறைகளை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு கடந்த வாரம் மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் விவரம் ஆகியவற்றை தேர்வுத்துறை வெளியிட உள்ளது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் தேர்வுத்துறை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று காலை 11 மணி அளவில் முடிவுகளை வெளியிடுகிறார். பள்ளி மாணவர்கள் தங்கள் பதிவு எண்,பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து இணைய தளம் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப் படிவத்தில் தெரிவித்துள்ள செல்போன் எண்ணுக்கும் உடனடியாக ரிசல்ட் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றுகளை, 22ம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணைய தளங்களில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் மதிப்பெண் பட்டியல்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* உயர்கல்வி படிக்க வசதியாக தசம முறையில் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ் 1 வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வில் இருந்து 20 சதவீதம், பிளஸ் 2 அகமதிப்பீட்டில் 30 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஒரு பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் 88.5 என்று வந்தால் அதை 89 ஆக மாற்றி முழு மதிப்பெண் வழங்கும் முறை முன்பு இருந்தது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தசம முறையில் இருக்கும். அதாவது, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏற்ப கட்-ஆப் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அப்படியே தசம எண்ணில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:
Plus 2 student score this morning will get the ‘mark’ according to the new system; Students expectation பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் இன்று காலை புதிய முறைப்படி ‘மார்க்’ கிடைக்கும்; மாணவர்கள் எதிர்பார்ப்புமேலும் செய்திகள்
சென்னையில் இன்று முகக்கவசம் அணியாத 233 நபர்களுக்கு ரூ.1,16,500 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை..!
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியல்: தாம்பரம் அருகே பரபரப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,758 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
போட்டோவுக்கு வித, விதமாக போஸ் கொடுத்து திருவிக. நகர் போலீஸ் ஸ்டேஷனில்; ரவுசு காட்டிய போதை இளைஞர்கள்
மாமல்லபுரம், கல்பாக்கத்தில் உயர் ரக பைக் திருடிய 3 பேர் கைது
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..