SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

2021-06-19@ 12:03:46

ஊட்டி : சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத போதும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கமான பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் சர்வதேச கோடைவாஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஊட்டி தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பூங்காக்களும், வனத்திற்குள் அமைந்துள்ள அவலாஞ்சி, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், லேம்ஸ்ராக், கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் உள்ளன. நீலகிரிக்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர்.

ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த சமயத்தில் வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இம்முறை கோடை சீசனை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. எதிர்பாராதவிதமாக மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன.

இதுதவிர மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலைரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அதனை கட்டுபடுத்தும் நோக்கில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் அமலில் உள்ளது. கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், சுற்றுலா ெதாழில் முடங்கி இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோடை  சீசனுக்காக நடவு செய்யப்பட்ட செடிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின. இம்முறை கோடை சீசன் இரண்டாவது ஆண்டாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி நிறைவுக்கு வந்த நிலையில், பூங்காக்களில் வழக்கம் போல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் மலர்கள் அழுகி காணப்படுகின்றன. இவற்றை அகற்றும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வளர்ந்துள்ள புற்களை அகற்றி புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் இரண்டாவது சீசனுக்கு பூங்காக்களை தயார் செய்யும் பணிகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்