SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன்... தவான் நெகிழ்ச்சி

2021-06-12@ 01:33:33

மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பொறுப்பை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறேன் என்று ஷிகர் தவான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஜூலை மாதம்  இலங்கையுடன் மோதவுள்ள தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. கேப்டனாக ஷிகர் தவான், யிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்கின்றனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 2 முறை வாய்ப்பு கிடைத்தும் காயம், உடல்தகுதி காரணமாக ஆடும் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்த முறை சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர்  வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக  சேர்க்கப்பட்டு இருக்கிறார். கேப்டனாக பொறுப்பேற்பது குறித்து தவான் பதிந்துள்ள ட்விட்டர் தகவலில், ‘தேசிய அணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ என கூறியுள்ளார்.

இந்திய அணி: தவான் (கேப்டன்), புவனேஷ்வர் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேதன் சகாரியா.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்