SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக-மார்க்சிஸ்ட் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

2021-03-07@ 01:57:09

சென்னை, மார்ச் 7: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்க உள்ளது. தேர்தல் நெருங்கி வருதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் கையெழுத்திட்டனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கே..என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு அடங்கிய தொகுதி பங்கீடு குழுவினர் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ேக.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். திமுக சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்படுகிற தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லி இருக்கிறார்கள். அது எங்களுக்கு போதுமானது அல்ல என்று கூறி இன்னொரு எண்ணிக்கையை கூறியுள்ளோம். மேலும் எங்களுடைய மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து பேசி அறிவிப்பதாக கூறி விட்டு வந்துள்ளோம். எங்களுடைய எண்ணிக்கை கூறியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதிமுக கூட்டணி என்பது காயலான் கடை இன்ஜின், எல்லாம் கழன்று போன இன்ஜின். அது எல்லாம் ஓடாது. அக்குவேராக ஆணி வேராக கழன்று கிடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்