SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்தது

2021-01-15@ 07:58:17

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.67 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.47 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.11 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 23,848,410, உயிரிழப்பு -  397,994, குணமடைந்தோர் -14,112,119
இந்தியா   -    பாதிப்பு- 10,528,508, உயிரிழப்பு -  151,954, குணமடைந்தோர் -10,162,082
பிரேசில்   -    பாதிப்பு - 8,326,115, உயிரிழப்பு -  207,160, குணமடைந்தோர் - 7,339,703
ரஷ்யா    -    பாதிப்பு - 3,495,816, உயிரிழப்பு -    63,940, குணமடைந்தோர் - 2,882,044
இங்கிலாந்து -  பாதிப்பு - 3,260,258, உயிரிழப்பு -    86,015, குணமடைந்தோர் - 1,406,967

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்