பூட்டான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்
2020-09-23@ 14:54:30

டெல்லி: நேபாளம், பூட்டான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், 'இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள குடிமக்கள் விசா இன்றி பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேசியா, மியன்மார் உள்ளிட்ட 43 நாடுகள் வருகையின் போது விசா பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குவதாகவும் இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியப் பயணிகளுக்கு இ-விசா வசதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
மேலும் செய்திகள்
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ரக்ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!