கடந்த மாதம் ஆனந்த கண்ணீர்; இந்த மாதம் கண்ணீர்; சென்னையில் மானியமில்லா வீட்டு சிலிண்டர் விலை ரூ.37 உயர்வு... இல்லத்தரசிகள் வேதனை...!
2020-06-01@ 12:58:41

சென்னை: தொடர்ந்து மூன்று மாதங்கள் விலை குறைந்த நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் உயர்ந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3-வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், தற்போது சென்னையில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்துள்ளது. அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைவிட 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் ரூ.569.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைபோல், டெல்லியில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 616 ரூபாயாக உள்ளது. மும்பையில் சமையல் எரிவாயு விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 590 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!