கொரோனா பரிசோதனையில் வெளிப்படை தன்மை தேவை: பிரியங்கா டிவீட்
2020-04-26@ 12:52:46

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதில் வெளிப்படை தன்மை தேவை என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என அரசு சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை குறித்து பெரும்பாலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியமாகும். ஒட்டு மொத்த சமூகம் மற்றும் அரசு ஒன்றாக இணைந்து கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த பணியாற்ற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் நடத்தப்படவேண்டும். கொரோனா குறித்த தரவுகளையும் உண்மையையும் மறைப்பது என்பது ஆபத்தானது.” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறப்பு
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!