விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம
2013-06-30@ 02:33:31

பவானி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வரும் ஜூலை மாதம் 18ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வரும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர். காவிரிக் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது விடாமுயற்சி, கடமை தவறாமை, நேர மேலாண்மை, அயராத உழைப்பால் இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் தந்தை பழனிச்சாமி கவுண்டர். தாய் நாச்சாயம்மாள். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் சுப்பிரமணியம், வேலுச்சாமி, ஆச்சாயி, அலமேலு. தந்தை இறந்து விட்டார். இதில், சகோதரர்கள் இருவரும் அதே கிராமத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி. மகன்கள் சீனிவாசன், செந்தில். ‘தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்’ தனது மகன் சதாசிவம், உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக வரும் 19ம் தேதி பதவியேற்பது குறித்து அவரது தாய் நாச்சாயம்மாள் கூறுகையில், ‘அடிப்படை வசதி குறைந்து காணப்பட்ட இக்கிராமத்திலிருந்து சிங்கம்பேட்டை பள்ளியில் சென்று உயர்நிலைக் கல்வி பெற்று, மேல்நிலை கல்வியை ஈரோடு சிஎன் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, சிவகாசியில் கல்லூரிக் கல்வியையும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் படித்தார். பள்ளிப் பருவம் முதலே படிப்பில் அதிக ஆர்வத்துடன் காணப்பட்ட சதாசிவம், இப்பதவியை அடைந்ததன் மூலம் இக்கிராமத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்‘ என்றார். இவரது சகோதரர்கள், மகன்கள், உறவினர்கள் மட்டுமின்றி இக்கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!