SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படித்து கொண்டே விடுதி முன்பு: தேனியில் சூப் கடை நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள்

2019-10-03@ 10:49:59

தேனி: தேனி சமதர்மபுரத்தில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டே மீதம் உள்ள நேரங்களில் தங்களின் விடுதி முன்பு சூப் கடை நடத்தி வருகின்றனர். தேனியில் சமதர்மபுரத்தில் மனிதநேய ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பல குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்திலேயே இந்த மையத்திற்கு வந்து, தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் வளர்ந்து விட்டாலும், தங்களை வளர்த்த காப்பகத்தை விட்டு வெளியேறவில்லை.

தற்போது இங்கு தங்கியிருக்கும் இரண்டு மாணவிகள் அரசு கல்லூரியில் நர்சிங் படிப்பு முடித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு புதிய ஐடியா தோன்றியது. மக்களை இயற்கை உணவு முறைக்கு திருப்ப வேண்டும் என முடிவு செய்தனர். தினமும் காலை இந்த ரோட்டில் ஏராளமானோர் வாக்கிங் செல்வார்கள். இதனால் காலை 4 மணிக்கே இவர்கள் எழுந்து, இங்குள்ள மற்ற குழந்தைகளின் உதவியுடன் வெஜிடபிள் சூப், முடக்கத்தான் சூப், வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை சூப், மணத்தக்காளி கீரை சூப், கானப்பயிர் சூப் என உடலுக்கு ஊக்கம் அளிக்கும் பல்வேறு சூப் வகைகளை விடுதி முன்பு விற்கின்றனர். இதன் அருகிலேயே ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இணைந்து டிபன் கடை தொடங்கி உள்ளனர். இங்கு மூன்று இட்லி 10 ரூபாய், ஒரு தோசை 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து காப்பக நிர்வாகி பால்பாண்டி கூறுகையில், ‘தேனி, வீரபாண்டி, கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகங்கள் இயங்கி வருகின்றன. தேனி சமதர்மபுரத்தில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை குழந்தைகளாக சேர்ந்து சூப் கடை வைத்துள்ளனர். அதன் பின்னர் பள்ளிக்கு சென்று விடுவார்கள். மாலை 5.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சூப் வியாபாரம் செய்கின்றனர். பின்னர் படிக்க சென்று விடுகின்றனர். இவர்களது முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிப்பது சந்தோஷமாக உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்