SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

2019-09-16@ 20:04:43

குலசேகரம்: குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது வீட்டிக்கு செல்லும்போது சாலையை கடந்து சுமார் 8 அடி நீள மலை பாம்பு வருவதை பார்த்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மலைபாம்பு அந்த பகுதியில் உள்ள வடிகாலில் புகுந்து மறைந்துக்ெகாண்டது.

இது குறித்து அவர்கள் குலசேகரம் வனத்துறையினருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். போனை எடுத்த வனத்துறையினர் இனிமேல் பாம்பு வந்தால் பிடித்து வைத்துக்கொண்டு தகவல் தெரிவியுங்கள் என கூறி போனை துண்டித்துவிட்டனர். அதன்பின் பொதுமக்கள் நேரடியாக அலுவலகம் சென்று புகார் அளித்தனர். அதன் பின்னரும் பாம்பை பிடிக்க வனத்துறையினர் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள், மீன்பிடிக்கும் வலைகளை வடிகாலில் மூடி பாம்பு வராத வகையில் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். என்றாலும் அப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட பயப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் பதுங்கி உள்ள மலைபாம்பை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்