SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவோயிஸ்ட் தாகம

2013-05-28@ 00:44:37

துப்பாக்கி ஏந்திய போலீஸ், துணை ராணுவ ஜவான்கள் ஆகியோரை மறைந்திருந்து சுட்டுக் கொல்வதை வழக்கமாக கொண்டிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், முதல் முறையாக நிராயுதபாணியான அரசியல் தலைவர்களையும் தொண்டர்களையும் கொடூரமாக கொன்றுள்ளனர். இதையும் நியாயப்படுத்த சில அறிவுஜீவிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது மட்டுமே இதைவிட பெரிய கொடுமையாக இருக்க முடியும்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களின் கார்களை மரத்தை வெட்டிப் போட்டு தடுத்து, 200க்கு மேற்பட்ட மாவோயிஸ்டுகள் எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர், அவரது மகன், முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் உட்பட 27 பேர் பலியாகி உள்ளனர்.

கடைசியாக குறிப்பிடப்பட்டவர் மகேந்திர கர்மா. இவர் சல்வா ஜுடும் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரசு மூலம் அதன் உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்து, மாவோயிஸ்டுகளுடன் மோதவிட்டவர். அதனால் அவரை கையை கட்டி சுட்டு, உடலை குண்டுகளால் சல்லடையாக்கி, சுற்றி நின்று தங்கள் துப்பாக்கியில் இணைத்துள்ள கூர்மையான கத்தியை அவரது தலையில் செருகிச் செருகி வெளியே எடுத்து, பீறிட்டு வந்த ரத்தத்தில் கால் நனைத்து நடனம் ஆடியுள்ளனர்.

மனிதர்கள் செய்யக்கூடிய காரியமா இது என்று அதிர்ச்சி அடையக்கூடாது. மாவோயிஸ்டுகளுக்கு இது சாதாரணம். கனிம வளம் மிகுந்த காட்டு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்ட அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்கவே மாவோயிஸ்டுகள் போராடுவதாக ஒரு கூட்டம் பிரசாரம் செய்கிறது.  அதை கேட்டால் கோயபல்ஸ் அதிர்ச்சியில் மயங்கி விழுவார். அவ்வளவு பெரிய பொய்.

சென்ற ஆண்டு இதே மாதத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட சுக்மா கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் அந்த பொய்யை அம்பலப்படுத்தினார்.  காடுகளில் சாலைகள் போடுவது, பள்ளிக்கூடம் கட்டுவது, ஆஸ்பத்திரி நிறுவுவது, மின்சார தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்துவது, வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற எந்த நடவடிக்கையும் மாவோயிஸ்டுகளுக்கு பிடிக்கவில்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமூச்சாக எதிர்த்தனர்.

அந்த திட்டத்துக்கு கலெக்டர்கள் சூட்டிய செல்லப்பெயர் ‘நக்சல் கில்லர்’ என்பது. இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால் ஆதிவாசிகள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்; அதுவே நக்சலைட் இயக்கத்துக்கு அடிக்கப்படும் சாவுமணியாக அமையும் என்ற பொருளில் வந்தது அந்தப் பெயர். சாதிக்கும் வேகம் நிறைந்த தமிழனான அலெக்ஸ் அரசாங்கத்தின் நல்வாழ்வுத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தினார்.  அதனால் ஆதிவாசிகள் மத்தியில் அவருக்கு ஆதரவும் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பும் பெருகியது. அதனால்தான் அலெக்ஸ் கடத்தப்பட்டார். இன்னொரு கலெக்டர் வினீல் கிருஷ்ணாவும் அதே கதிக்கு ஆளானார்.

அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊழல் என்பது சட்டீஸ்கரில் மட்டும் நடப்பதல்ல. நாடு முழுவதும் அதுதான் நடக்கிறது. ஊழலில் சேதாரமானது போக ஓரளவு பலன் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சுரண்டல், ஊழல் பேர்வழிகளை தாண்டி அரசியல், நிர்வாக, நீதி, காவல், தொண்டு, ஊடக துறைகளில் நல்லவர்கள் இருக்கின்றனர். அவர்கள் விழிப்புணர்வுடன் கடமை ஆற்றுவதால்தான் இந்தியாவில் அரசியல் சமூக அமைப்பு இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது. அதை முற்றிலுமாக தகர்ப்பது மட்டுமே மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் லட்சியம்.

1967ல் இருந்து அவர்கள் இதற்காக போராடுகின்றனர். அவர்கள் ஆதிவாசிகள் அல்ல. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் சிறுபான்மை வகுப்பினர் அல்ல. அவர்கள் சட்டம், நீதி, அரசு போன்ற எந்த சமூக அரசியல் கட்டமைப்புக்கும் கட்டுப்படாத , அவை எதையும் ஏற்றுக் கொள்ளாத , அராஜகவாதிகள். நிராயுதபாணி மக்களை துப்பாக்கி முனையில் அடிமைப்படுத்தி,  நடைமுறைக்கு ஒத்துவராத , வரலாற்றால் புறக்கணிக்கப்பட்ட , காலத்தால் கைவிடப்பட்ட , சித்தாந்தங்களை மக்களின் சிந்தனையில் திணிக்க எத்தனிக்கும் ரத்த வெறி பிடித்த பயங்கரவாதிகள். வெளிச்சத்தில் இருட்டைத் தேடும் போலிப் போராளிகள்.

அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மன்மோகன் சிங் சொன்னார், ‘இந்தியா எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள்’ என்று. நாட்டின் 28 மாநிலங்களில் 25ல் மாவோயிஸ்ட்களின் தடங்கள் பதிந்துள்ளன என்கிறது உள்துறை அமைச்சகம்.  மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் அத்தனை பேரையும் அழிப்பது பெரிய சிரமம் கிடையாது. ஆனால் அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாவதை தவிர்க்க முடியாது.

ஏனெனில் மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களையும் ஆதிவாசிகளையும் எப்போதும் உடன் வைத்திருக்கிறார்கள், மனித கேடயங்களாக. அவர்கள் சீருடை அணிந்த போர்ப்படை போல போஸ் கொடுப்பதெல்லாம் ஊடகங்களுக்காக மட்டுமே. மற்ற நேரங்களில் சராசரி மக்களுக்கும் அவர்களுக்கும் உருவ வித்தியாசம் தெரிவதில்லை. மக்கள் ஆதரிக்காத ஆயுதப் போராட்டம் வென்றதாக வரலாறு இல்லை. மாவோயிஸ்டுகள் அதை உணர்ந்து அரசியல் பாதைக்கு மாறத் தவறினால் அழிவை தவிர்க்க இயலாமல் போகும்.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon

Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

 • newyork-blizzard

  நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்