லாரி மோதி உயிரிழந்த டெய்லர் குடும்பத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு
2019-06-17@ 00:54:32

சென்னை: சென்னை அய்யப்பன்தாங்கல், சுப்ரமணியன் நகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பிருந்தா. டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் - திருத்தணி சாலையில் சங்கர் தனது மனையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சுங்கச்சாவடி அருகே சென்றபோது, வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பிருந்தா உயிரிழந்தார். இதையடுத்து, இறந்த மனைவிக்கு இழப்பீடு கோரி சங்கர் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘‘ இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 19 லட்சத்து 8 ஆயிரத்து 950 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
லோக் அதாலத்தில் 5204 வழக்குகளுக்கு தீர்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!