விமானப்படைக்கு வலு சேர்க்க சுகோய் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை
2019-06-10@ 00:34:05

புதுடெல்லி: பாலகோட் வான்வழி தாக்குதல் எதிரொலியாக, இந்திய விமானப்படையை மேலும் வலுவாக்க, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பொருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்தன. அவற்றை விரட்டும் முயற்சியில் இந்தியா தனது மிக்-21 ரக போர் விமானம் ஒன்றை இழந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 40 சுகோய் போர் விமானங்களில் உலகின் அதிவேகமான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பொருத்தும் பணியை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இப்பணியை கடந்த 2017ம் ஆண்டு எச்ஏஎல்-பிரமோஸ் விண்வெளி நிறுவனம் இணைந்து தொடங்கின. ஆனால், மந்தகதியில் நடந்து வரும் இப்பணியை விரைவுபடுத்தி, 2020 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணைப்பு பணியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. 40 சுகோய் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. இது, 290 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தகர்க்கும். தற்போது இந்த இலக்கை 400 கிமீ வரை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த ரக ஏவுகணையை பொருத்துவதற்கு ஏதுவாக சுகோய் விமானத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
சுகோய் விமானத்தில் பொருத்தப்படும் மிக அதிக எடை கொண்ட ஏவுகணை பிரமோஸ் ஆகும். ஏற்கனவே கடந்த 2017ல் இந்த ஏவுகணையை சுகோய் விமானத்தில் பொருத்தி இலக்கை தாக்கும் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. சுகோய்-பிரமோஸ் இணைப்பு பணி நிறைவடையும் பட்சத்தில், நீண்ட தூர கடல் வழி மற்றும் தரை வழி இலக்கை தகர்க்கும் வல்லமையை இந்திய விமானப்படை பெறும். அதோடு, இந்திய விமானப்படையில் விரைவில் இடம் பெற உள்ள ரபேல் போர் விமானத்துடன் எஸ்-400 ரக ஏவுகணையும், சுகோயுடன் பிரமோசும் இணையும்பட்சத்தில் பாகிஸ்தான் விமானப்படையை காட்டிலும் இந்திய விமானப்படை பன்மடங்கு பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!