SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதால் பரபரப்பு; பேட்டரியை எடுக்கவே அகற்றம் என காஞ்சிபுரம் ஆட்சியர் விளக்கம்

2019-04-19@ 09:04:46

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவந்தண்டலம் மற்றும் வாயலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் அலுவலர் சீலை அகற்றியதாக புகார் எழுந்துள்ளது. அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றியது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 66,699 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க 160 கம்பெனி துணை ராணுவ வீரர்களும், சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 66,699 வாக்குப்பதிவு மையங்களிலும் நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்துக்கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, அந்தந்தந்த தொகுதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டிராங் ரூமுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஆட்சியர் விளக்கம்

காஞ்சிபுரம்: காவந்தண்டலம் மற்றும் வாயலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டது குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பேட்டரியை எடுப்பதற்காகவே சீல் அகற்றப்பட்டது என்று ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்