ஏபிஎஸ் பிரேக்குடன் வருகிறது டிவிஎஸ் அப்பாச்சி 160
2019-03-03@ 00:04:16

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் 150-160 சிசி ரக பைக் மாடல்களில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி மாடல் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக்கில் டபுள் கிராடில் ஸ்பிளிட் சிங்க்ரோ ஸ்டிப் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சேஸீயானது டிவிஎஸ் ரேஸிங் அமைப்பின் ஆலோசனைகளின்படி உருவாக்கப்பட்டது. இந்த பைக்கில் 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 16.28 பிஎச்பி பவரையும், பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இன்ஜின் அதிகபட்சமாக 16.56 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் ரகத்தில் மிகச்சிறந்த செயல்திறன் பைக் என்பதைவிட, அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் பைக் மாடலாக கூறலாம். தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறந்த மாடலாக கூறலாம். சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட், யமஹா எப்இசட் வி3.0, பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய போட்டியாளர்களுக்கு இணையாக இப்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் வந்துவிட்டதால், முக்கிய தேர்வாக மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ.98,644 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.6,999 கூடுதல் விலையில் வந்துள்ளது. இந்த மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த சில வாரங்களில் கார்புரேட்டர் மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேலும் செய்திகள்
வான் வழியே பாய்ந்து வரும் தங்க மழை: 5 ஆண்டுகளில் 11 டன் கடத்தல்; இறக்குமதி வரி, விலை உயர்வால் அதிகரிப்பு; தடுக்க மாற்று வழியை தேடுமா ஒன்றிய அரசு
காலத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் பரதக்கலை: வடசென்னையில் அதிகரிக்கும் பரத நாட்டிய பள்ளிகள்
நவம்பர் 19 (இன்று) உலக கழிவறை தினம்
இலங்கைக்கு செல்ல ராமருக்கு வழிகாட்டிய பிள்ளையார்: ஆன்மிக பக்தர்களின் மனதை கவரும் சேதுரஸ்தா சாலை
புண்ணியத்தை தேடி தரும் கும்பகோணம் மகாமககுளம்
பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!