SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டவிரோதமாக குழந்தைகளை வளர்த்த விவகாரம் திருச்சி காப்பக நிர்வாகி சென்னை ஏர்போர்ட்டில் கைது: ஜெர்மனியில் இருந்து திரும்பியபோது சிக்கினார்

2017-10-29@ 01:20:33

திருச்சி : பெண் குழந்ைதகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி வளர்த்து விவகாரத்தில் திருச்சி காப்பக நிர்வாகி சென்னையில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் வக்கீல் பாடம் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011ல் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.  அதில், `கடந்த 2002ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காப்பகம் வைத்து நடத்திய கிதியோன் ஜேக்கப், அவரது மனைவி உட்டே ஜேக்கப் இருவரும் சிசு கொலையை தடுப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கினர். பின்னர் அந்த குழந்தைகளை காப்பகத்தில் வளர்த்து, போலி பிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

குழந்ைதகளை வெளிநாடுகளில் உள்ள சர்ச் மற்றும் பாதிரியார் இல்லங்களுக்கு வேலைக்கு அனுப்பி உள்ளனர். எனவே வியாபார ரீதியாக உள்ள காப்பகங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, ஆய்வு நடத்தப்பட்டு தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 820 காப்பகங்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் பாடம் நாராயணன் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், `திருச்சி சுப்பிரமணியபுரம் 2வது தெருவில், நல்மேய்ப்பன் சபைக்கு சொந்தமான மோசே மினிஸ்ட்ரிஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்   அனுமதியின்றி செயல்படுகிறது. இந்த காப்பகத்தில்  உசிலம்பட்டி காப்பகத்தில் இருந்த 89 குழந்தைகளை கடத்தி வந்து இங்கு தங்க வைத்துள்ளனர்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை, உயர்நீதிமன்றம் விசாரித்து, `சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பெற்றோரை கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, காப்பகம் அரசு கட்டுப்பாட்டில் வந்ததாகவும், காப்பகத்தில்  18 வயதிற்குள் 64 பேரும், 18 வயதிற்கு மேல் 25 பேரும் உள்ளனர்’ என்றும் சமூக நல அலுவலர் உஷா தெரிவித்தார். இதற்கிடையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

வெளிநாடு தப்பி சென்ற கிதியோன் ஜேக்கப்பை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 3 தடவை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளி என சிபிஐ அறிவித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த கிதியேன் ஜேக்கப்பை அதிகாரிகள் பிடித்து வைத்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அவரை சிபிஐ போலீசார் கைது செய்து, நேற்று காலை திருச்சியில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் (பொ) மாஜிஸ்திரேட்டிடம் வழக்கு ஆவணங்களுடன் ஒப்படைத்தனர். அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் 36 குழந்தைகள் கதி என்ன?

இதுகுறித்து பாடம் நாராயணன் கூறுகையில், `சிபிஐ அதிகாரிகள் கிதியேன்ஜேக்கப்பை கைது செய்து இருப்பது வரவேற்கதக்கது. உசிலம்பட்டியில் இருந்து 125 குழந்தைகளுடன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் 89 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. இவர்களையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்