SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருநோய்களை விரட்டும் சிறுதானியங்கள்

2017-10-12@ 12:43:52

அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, நியாசின், தயமின், ரிபோபிளவின் ஆகிய வைட்டமின்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் அதிகளவு உள்ளன. மேலும் சிறுதானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து மனிதஉடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதனால் புற்றுநோயினை வெகுவாய் குறைக்கிறது.

100 கிராம் சிறுதானியங்களில் அதிகபட்சமாக 12.5கிராம் புரதச்சத்து உள்ளது. ஆனால் அரிசியில் 7.9கிராம் மட்டுமே உள்ளது. இதேபோன்று அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து 13.6கிராம், இரும்புச்சத்து 18.6மி.கிராம், கால்சியம் 350மி.கிராம் உள்ளன.

உடல்ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு:

சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. பெருங்குடலின் செயல்பாட்டினை சீராக்குகிறது. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. சிறுதானியங்களில் அதிகளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. ரத்தஅழுத்ததை சிறுதானியங்கள் சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.

சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோர்க்கு இரண்டாம்வகை (அதாவது இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. அதிகம் சிறுதானியங்களை பயன்படுத்தும் போது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்