ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை
2017-02-23@ 00:04:40

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் திரட்டிய வழக்கில் மயிலாப்பூரை சேர்ந்த வாலிபரிடம் 2வது நாளாக தீவிரவாத தடுப்பு போலீசார் சிரியாவில் உள்ள பயங்கரவாத தலைவரிடம் நேரடியாக பேசியது என்ன என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை ேசர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன் ஜமீல் அகமது வை கடந்த நவம்பர் மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சென்னை மயிலாப்பூரை சோந்த முகமது இக்பாலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக ரூ.65 ஆயிரம் பணம் வழங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தங்கம் கடத்தல் வழக்கில் புழல் சிறையில் இருந்த முகமது இக்பாலை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். பின்னர் ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு நேற்று முன்தினம் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தமிழக உளவுத்துறை அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள், சென்னை மாநகர போலீசார் உதவியுடன் இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 12 மணி நேரத்திற்கு ஒரு முறை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முகமது இக்பாலுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முகமது இக்பாலிடம் நேற்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை செலுத்தியுள்ளார்.
அதன்பிறகு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபுசாத் உடன் “கே.ஐ.கே. மெசென்ஜர்” மூலம் நேரடியாக முகமது இக்பால் பேசி அவர் கூறும் கட்டளைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இதனால் அபுசாத் எந்த விதமான கட்டளைகளை வழங்கினார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் திரட்ட எந்த விதமான வீடியோக்கள் அனுப்பட்டது. முகமது இக்பால் வலையில் சிக்கி உள்ள 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 14 பேருக்கு எந்த விதமான மூளை சலவை செய்யப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு மூலையாக காண்பிக்கப்பட்ட வீடியோ என்ன? அதில் யார் பேசியது? மாணவர்களிடம் முகமது இக்பால் எப்படி அணுகி தன் வசப் படுத்தினார்? அபுசாத் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு என்ெனன்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி