மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2017-02-05@ 00:38:04

சென்னை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹகிம் (35). இவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை தனது தாயிடம் அந்த குழந்தை கூறியுள்ளது. இதையடுத்து, தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹகிமை போலீசார் கைது செய்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஹகிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றம், ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்