தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிச
2012-10-11@ 01:47:01

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மின்கோரா நகரை சேர்ந்த 14 வயது சிறுமி மலாலா யூசுப்சய். இந்த சிறுமி, பெண் கல்விக்காகவும், குழந்தைகள் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறாள். தலிபான் தீவிரவாதிகளின் கொடுமைகள் குறித்து துணிச்சலாக எழுதினார். இவளை பாராட்டி தேசிய அமைதி விருது கொடுக்கப்பட்டது.
மின்கோராவில் உள்ள பள்ளியில் படிக்கும் மலாலா நேற்று முன் தினம் மாலை பள்ளி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது தலிபான் தீவிரவாதிகள் அவளை கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், அவளது வயிற்றி லும், தலையிலும் குண்டுகள் துளைத்தன. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்நிலையில், சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடு ப்பவர்களுக்கு ஸி1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்,பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட டெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம், சிறுமியை கொல்ல முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.38 கோடியை தாண்டியது.! 64.51 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகின் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு வேகமாக சூடேறும் ஆர்க்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது: கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை
அம்பந்தொட்ட துறைமுகத்துக்குள் வராமல் 600 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன உளவு கப்பல் நிற்பது ஏன்?: இந்தியாவுக்கு சிக்கல் வலுக்கிறது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!