SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கலவரம் நடந்த பகுதியை பார்வையிட சென்ற பாஜ மத்திய குழுவுக்கு மே.வ. போலீசார் தடை

2016-12-25@ 00:19:08

ஹவுரா: ஹவுரா மாவட்டத்தில் கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய சென்ற பாஜ மத்திய குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து  இரு தரப்பினர் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். தற்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய பாஜ  எம்பிக்கள் ஜகதம்பிகா பால், சத்பால் சிங், மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய செயலாளர் ராகுல் சிங்கா அடங்கிய குழு கட்சி தொண்டர்கள் புடை சூழ வந்தது. துலாகர் நகருக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உள்ளே செல்வதை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த பாஜ பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமமாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், `‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை. மம்தா அரசு ஒரு பிரிவினரை சாந்தப்படுத்தும் கொள்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்