SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜீப்ரானிக்ஸ் மல்ட்டிமீடியா ஸ்பீக்கர் ரூ.4242-க்கு அறிமுகம்

2016-12-20@ 16:06:16

அதன் தகவல் தொழில்நுட்ப துணைப்பொருட்களுக்கு மிகவும் புகழ்பெற்ற மேலும் ஆடியோ மற்றும் வீடியோ பொருட்கள் தயாரிப்பில் விரைவாக வளர்ந்து வரும் பிராண்டான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆடியோ பிரிவில் மற்றுமொரு புதிய பொருளை இணைத்துள்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், டவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் – என்று நுகர்வோரிடம் இருந்து புதிய ஆடியோ சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், பிராண்டு ஜீப்ரானிக்ஸ் ஒவ்வொரு மாதமும் ஒருசில புதிய பொருட்கள் என்று புத்தம்புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.

தற்போதைய அறிமுகம் இந்த 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கர் ஆகும். ZEB-BT361RUCF என்று அழைக்கப்படும் இந்த 2.2 ஸ்பீக்கர் நிச்சயமாக அனைவரின் கண்களையும் கவர்வதாகவும், தங்களது வீடுகளில் இருந்து துள்ளலான இசையை கேட்கும் அல்லது திரைப்படத்தைப் பார்க்கும் இசைப்பிரியர்களின் மனதைக் கவர்வதாகவும் அமையும். இதன் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு வழங்கப்பட்டுள்ள மரப்பெட்டி அமைப்பு – இசைப்பிரியர்கள் பொதுவாக எதிர்பார்க்கும் உறுதியையும் நேர்த்தியான தோற்றத்தையும் இதற்கு வழங்கும்.

ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் நமது அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸின் இயக்குநர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார். ஜீப்ரானிக்ஸின் புதிய ஸ்பீக்கர் ப்ளூடூத் இணைப்பு பெறும் வசதி, USB போர்ட், SD சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனருடன் வருகிறது. சப்வூஃப்பரின் ஒலி வெளிப்பாட்டு சக்தி 25W ஆகும், அதேவேளை இதன் ஒவ்வொரு துணை ஸ்பீக்கர்கள் 12W வெளிப்பாட்டினை வழங்குகின்றன; இது சரியான அளவு பேஸ் மற்றும் உயர்ந்த ட்ரிப்பில் இசையின் சிறந்த கலவையை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

LED காட்சித்திரையுடன் அழகாக பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பலகம் இதன் மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவி செய்கிறது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2.2 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும்.

ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைனிலும் நாடு முழுதும் உள்ள நிறுவனத்தின் விநியோக கூட்டமைப்பின் மூலமாகவும் விற்பனை செய்யப்படும். இதற்கு ரூ.4242 என்று எளிதாக வாங்கக்கூடிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டைப் பற்றி

ஜீப்ரானிக்ஸ் இந்தயாவின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப துணைப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும். ஜீப்ரானிக்ஸ் பிராண்டு என்பது இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் முக்கியமாக இளைஞர்களிடையே அதிகமாக பேசப்படும் பெயராகும். 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தனது தலைமையகத்தை சென்னையில் கொண்டுள்ள ஜீப்ரானிக்ஸ் பல்வேறு வகையான பொருள் வகைகளைக் கொண்டிருக்கிறது, மேலும் 25 பொருள் பிரிவுகளையும் 350 க்கும் அதிகமான SKUகளையும் கொண்டுள்ளது. இதன் பல்வேறு பொருட்களில் தகவல்தொடர்பு துணைப்பொருட்கள், ஸ்பீக்கர்கள், துணைக்கருவிகள், LED தொலைக்காட்சிகள், கண்காணிப்பு சாதனம் மற்றும் கூலர்கள் ஆகியவை அடங்கும்.

இந்த பிராண்டிற்கு நாடு முழுவதும் 31 அலுவலகங்கள் உள்ளன மேலும் 900+ மக்களை இது பணியமர்த்தி உள்ளது. இந்தியா முழுவதும் அமைந்துள்ள 20,000 சேனல் பங்காளர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பின் மூலமாக ஜீப்ரானிக்ஸ் இயங்குகிறது, மேலும் இதற்கு 126+ சேவை மையங்கள் உள்ளன. இந்நிறுவனம் 57க்கும் அதிகமான புகழ்பெற்ற  தொழில்துறை விருதுகளைப் பெற்றுள்ளது.

கூடுதல் தகவலுக்கு

ராகுல் ஷர்மா, பொது உறவுகள் பிரிவுத் தலைவர், ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

இணையம்: www.zebronics.com | www.facebook.com/zebronics

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்