புதுகை அருகே 3500 ஆண்டு பழமையான பானைக்குறியீடுகள் கண்டுபிடிப்பு
2016-10-21@ 21:35:06

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்லுனி ஆறு அருகே அமபலத்தான் மேடு என்ற பழமையான வாழிடம் உள்ளது. இங்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் மணிகண்டன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் மிக அபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுபற்றி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறுகையில், ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல், வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் 173 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பாலை நிலத் தாவரங்கள் முட்புதர்காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக உருக்குக்கழிவுகளும் உலோக வார்ப்பு மண் உருளைகளும், கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானைக்குறியீடுகளை ஒப்பு நோக்கும்போது தமிழின் எழுத்துவகைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும் அறிய முடிகிறது. இந்தக்குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது.
அம்பலத்திடலில் கருப்பு, வெள்ளை பானை ஓடுகளும் கருப்பு ஓடுகளும், தாழியின் பெரிய பாண்ட ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தமிழகத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட கரூர், உறையூர், அழகன்குளம், வல்லம், கொடுமணல் ஆகிய ஊர்களின் கீழ் அடுக்கில் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளும், இரண்டாம் அடுக்கில் தமிழி எழுத்துக்களும் பொறித்தவையாக உள்ளன. இதன் மூலமாக இக்கீரல்களை எழுத்தின் முன்னோடி அடியாளம் என அறியலாம். அதுமட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கிடைத்த பானைக்குறியீடுகள் இங்கு கிடைத்த பானைக்குறியீடுகளோடு முழுமையாக ஒத்துபோகிறது. இந்த குறியீட்டு எழுத்துகள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும் பெருங்கற்கால குறியீடாக வரையறுக்கப்பட்டுள்ளதாலும் இந்தக்குறியீடுகளை 3500 ஆண்டுகளுக்கு மேம்பட்டவையாகவே கருத வேண்டியுள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளை கொண்டு தொடர் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம் இதில் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...