SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டம் : ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

2016-09-22@ 00:20:01

சென்னை: தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் கடற்பாசிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த  கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்படும் “கராகீனன்” என்பது ஒரு வகையான மாவுப்பொருள் ஆகும். உணவு, ரசாயனம், மருந்து மற்றும் அழகு சாதன தயாரிப்பு பொருட்களிலும், ஐஸ்கிரீம் மற்றும் பற்பசை தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாய பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கடற்பாசியில் இருப்பதால், இதனை விவசாயிகள் இயற்கை உரமாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1500 டன் “கராகீனன்” வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கடற்பாசி உற்பத்தியை பெருக்குவதற்காக தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் ஆழம் குறைந்த பகுதிகளில் கடற்பாசி பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் மீனவ மகளிர் குழுக்களின் மூலம் ஒப்பந்த முறையில் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.  

மீனவ மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து, தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வீதத்தில் 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்