SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

7 பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை

2016-07-25@ 02:00:17

மதுரை: ஏழு பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’  நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கே.புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் சாலமியா பானு (28). இவர் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் கொடுத்த மனுவில், ‘மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமாவின் அறிமுகத்தின் பேரில், காதர் பாட்சா என்பவருக்கும், எனக்கும் கடந்த ஜூன் 26ல் திருமணம் நடந்தது. மதுரை அண்ணா நகரில் வசித்தபோது, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம், 8 பவுன் நகைகள், ஏடிஎம் கார்டுகள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.35 ஆயிரத்துடன் காதர்பாட்சா தலைமறைவாகி விட்டார். இவர் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு சென்னையை சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனா, வத்தலக்குண்டை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். எனவே, காதர்பாட்சா, தஸ்லிமா, அப்துல்கயூம் மற்றும் அவரது நண்பர் ஜாகீர்உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் நேற்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், காதர்பாட்சா, தன்னிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக மதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்