பட்டறைபெரும்புதூரில் அகழ்வாராய்ச்சி : கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிப்பு
2016-07-05@ 01:33:56

சென்னை: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தொல்பொருள் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 38 இடங்களில் தமிழக அரசு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பொருட்களை அருகில் உள்ள அகழ் வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாண்டு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தொல்பொருள் துறை இயக்குனர் டி.கார்த்திகேயன், துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், களப்பணியாளர்கள் ஜெ.பாஸ்கர், ரஞ்சித், பாஸ்கர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்தனர். ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 அகழாய்வு குழிகள் இருந்தன.
ஆய்வில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், உலோக காலத்தை சேர்ந்த மட்பாண்டங்களான சிவப்பு மட்கலன்கள், மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், இரும்பு பொருட்கள், கல்மணிகள், செம்பு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை தந்தத்தாலான கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன மணிகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வரலாற்று தொடக்க காலத்தை பதிவு செய்யும் தமிழ்பிராமி எழுத்து கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள், துளையிடப்பட்ட கூரை ஓடுகள் போன்ற 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த ஆய்வில் இவ்வூரில் கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதர்கள் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளதை மண்ணடுக்குகளின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தொல்பொருட்கள் அனைத்தும், பட்டறைபெரும்புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் பார்வைக்கு நேற்று வைக்கப்பட்டது. இதை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...