ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் தொடர்பு : வேலூரில் பிடிபட்ட தீவிரவாதியிடம் விசாரணை
2015-10-17@ 00:36:11

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிரவாதியிடம் 26 மணிநேரமாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை அவனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலூரில் பிரபலமான சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த 14ம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர் மருத்துவமனையில் 4 இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கூறினான். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து காலை முதல் மாலை வரை மருத்துவமனையில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
மிரட்டல் வந்த போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆம்பூர் உமர் ரோட்டில் மதரசா என்ற இடத்தில் பதுங்கி இருந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சையத் அகமது அலி(40) என்பவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்தார். இதனால், எஸ்.பி. செந்தில்குமாரி, காவல்துறை இயக்குனரக ஏஐஜி ஆஸ்ராகர்க், சிபிசிஐடி டிஎஸ்பி ஆனந்தகுமார், நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தினர். விடிய விடிய சுமார் 26 மணிநேரமாக நடந்த இந்த விசாரணை நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது.
இந்த விசாரணையில் பிடிப்பட்ட சையத் அகமது அலி உபி மாநிலம் ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளவன் என்றும், அவனிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், உத்தரபிரதேச மாநில போலீசாரும் வருவார்கள் என்றும் தகவல் கிடைத்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தொடர் விசாரணையில் திரிபுரா மாநிலம் தலியார்கந்தி கிராமத்தை சேர்ந்த சையத் மாமுன்அலி என்பவரின் மகன் என்றும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதற்காக சென்னை அப்பல்லோ, அசாம் மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.
சிகிச்சைக்காக மீண்டும் சிஎம்சி மருத்துவமனைக்கு வரும்போது தன்னை செக்யூரிட்டிகள் வெளியில் தள்ளியதும், இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தம் தெரியவந்தது. சையது அகமதுஅலியை வேலூர் ஜேஎம் 1 கோர்ட்டில் போலீசார் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மீனாசந்திரா வருகிற 30ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவைல விதித்து உத்தரவிட்டார். இதனால், வேலூர் சிறையில் அவரை அடைத்தனர். முன்னதாக, முகமது அலியிடம் இருந்து 11 சிம்கார்டுகள், 4 செல்போன்களை பறிமுதல் செய்து உள்ளனர். இதில், ஒன்றை பயன்படுத்திதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;