SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-10-07@ 01:06:54

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது. சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகள் சுபத்ரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள  ஒரு மெத்தைக் கடையில் வேலை பார்ப்பவர் நஷீர் (31). கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சுபத்ராவை நஷீர் தனது  கடைக்குள் கூட்டிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதையடுத்து, குமரகுரு கொடுத்த புகாரின்படி, நஷீரை கைது செய்த போலீசார் அவர் மீது குழந்தைகள் பாலியல் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ்  வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டதால் நஷீருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5  ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicilline amoxicillin amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்