காஷ்மீரில் ஐ.எஸ். அமைப்பின் கொடி எரிக்கப்பட்டதால் பதற்றம் : தொடரும் கல்வீச்சால் ஊரடங்கு உத்தரவு
2015-07-22@ 10:07:03

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள், குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காஷமீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரீசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...