ஆம் ஆத்மி பிரச்சாரத்திற்கு ஹவாலா பணம் : தொலைக்காட்சி செய்தியால் டெல்லியில் பரபரப்பு
2015-02-03@ 09:25:38

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி போலியான நிறுவனங்களின் பெயரில் நன்கொடை பெற்றுள்ளதாக வெளியான தகவலால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமான வியாபாரத்திலும் ஈடுபடாமல் 3 நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஆங்கில செய்தி தொ¬க்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது ஹவாலா பணம் என்றும், இது குறித்து கம்பெனிகள் பதிவாளர் அலுவகத்தில் புகார் தெரிவிக்க போவதாகவும் அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. நன்கொடை பெற்றதில் தவறில்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு கட்சி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 35 இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியான கருத்து கணிப்பை தொடர்ந்து பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள 1 கோடியே 20 லட்சம் வாக்களர்களுக்கும் ஆதரவு கோரி தனித்தனியாக கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.. ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி
'மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்' அதிமுகவில் இணைந்து செயல்பட சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சொல்லிட்டாங்க...
இமாச்சலத்தில் 2 காங். எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்
ஜம்மு காஷ்மீர் காங். பிரசார குழு தலைவர் சோனியா வழங்கிய பதவியை நிராகரித்தார் குலாம் நபி ஆசாத்: அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...