SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

உடனே அனுப்புங்க.. ஊசியை போடுங்க...!

2015-01-12@ 17:39:18

குழந்தைகளுக்கு 5 வயது ஆகும் வரை தடுப்பூசியை கட்டாயம் போட்டே ஆக வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்றோர் தங்களுக்கு தரப்பட்ட கால அட்டவணைப்படி, அந்தந்த பருவத்தில் தடுப்பூசி போட வேண்டும். அரசு தரப்பில் போலியோ தடுப்பூசி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறிவிப்புடன் போடப்பட்டு வருகிறது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஏராளமான பெற்றோர் இதனை நினைவில் வைத்துக் கொள்ள மறந்து விடுகின்றனர். இனி கவலையை விடுங்க... உங்ககிட்ட செல்போன் இருந்தா போதும். தடுப்பூசி போடுவதற்கு 3 நாள் முன்னாலேயே நமக்கு எஸ்எம்எஸ் மூலம் ஞாபகப்படுத்தும் வசதி தற்போது வந்தாச்சு... இதுக்கு National vaccine reminder என்று பெயர்.

இது ஒரு இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுக்கு நாம செய்ய வேண்டியது இதுதான்...

Immunize < space ><குழந்தையின் பெயர்>< space ><பிறந்ததேதி> என்று டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, Immunize Yazhini 13062014 என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனே உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று முதல்கட்ட தகவல் வரும்.

அடுத்து உங்கள் குழந்தைக்கு எந்த தடுப்பூசி, எந்த தேதியில் போடவேண்டும் என்ற தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்த தகவல் வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நாள் இடை வெளியில் 3 முறை நினைவூட்டுவார்கள்.

ஓகே... உடனே எஸ்எம்எஸ் பண்ணுங்க... வாசகர்களே மறந்திடாதீங்க...!

18, 20க்கு ரெடியா?

வரும் 18ம் தேதி மற்றும் பிப்ரவரி 20ம் தேதி 5 வயதிற்குட்பட்ட உங்களது குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டும். அதை மறந்திடாதீங்க...!

abilify and coke abilify maintena abilify and coke
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்